• Sep 21 2025

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியீட்டில்குழப்பம்...!வெளியான காரணம் என்ன தெரியுமா?

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முக்கிய இடத்தை பிடித்துள்ள நடிகர் சூர்யாவுக்கு, தற்போது தொடர்ச்சியாக சவால்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. ‘சிங்கம்’ படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான எந்த படமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், அவை நேரடியாக OTT யில் வெளியானதால் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் சூர்யாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.


பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ‘கங்குவா’ திரைப்படம், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 80களின் பின்னணியில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படமும் பெரிதாகக் கிளிக்கவில்லை.

இந்நிலையில், சூர்யா தனது உறவினர் எஸ்.ஆர். பிரபுவின் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகினாலும், ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படாதது ரசிகர்களிடையே கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் தொடக்கத்திலிருந்தே பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கி உள்ளது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், கோபத்தில் பாலாஜி சில நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறதாம்.


அதுமட்டுமின்றி, இப்படத்தின் ஓடிடி உரிமையும் இன்னும் விற்கப்படவில்லை என்பதும் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் தீபாவளி ரிலீஸாக திட்டமிட்டிருந்தாலும், இந்த உள்நிலை பிரச்சனைகள் காரணமாக அது நடத்தப்படவில்லை.

தற்போது, தயாரிப்பாளர்கள் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14, 2026 ல் ‘கருப்பு’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் ‘கருப்பு’ பட வெளியீட்டில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில் ரூ.100 கோடி என இருந்த நிலையில், தற்போது ரூ.130 கோடி வரை செலவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஹீரோ சூர்யா தனது உறவினர் என்பதால் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நேரடியாக எதையும் கூற முடியாமல், பதற்றத்தில் உள்ளதாக அறியப்படுகிறது.

இந்த நிலைமை பார்க்கும்போது, ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14க்கு முன் வெளியாகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஆனால் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டியது மட்டும் தான் மீதமுள்ளது.

Advertisement

Advertisement