• Dec 27 2024

வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா? பிரபலம் கேள்வி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில்சூர்யா சூர்யா நடித்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்கள். இந்த  திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனாலும் அன்றைய நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது.

நடிகர் சூர்யா - இயக்குனர் சிவா கூட்டணி உருவாகியுள்ள கங்குவா  திரைப்படம் வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளது. இந்தப் படம் தொடர்ந்து அடுத்தடுத்த ரிலீஸ் தேதிகளுக்காக தவித்து வந்த நிலையில், அக்டோபர் 10 ஆம் தேதி சர்வதேச அளவில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் அன்றைய தினத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் கங்குவா - வேட்டையன் நேருக்கு நேர் மோத உள்ளதாக பல்வேறு தரப்பினரும் ஆச்சரியப்பட்டார்கள்.

எனினும் தற்காலத்தில் அதிக பொருட் செலவில் படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே அதிக லாபம் பார்க்க முடியும் என்ற கணிப்பை தயாரிப்பாளர்கள்  வைத்துள்ளார்கள். இதன் காரணத்தினாலே கங்குவா  படத்தின் ரிலீஸ் தேதி பிற்போடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், போட்டி என்று வந்துவிட்டால் தைரியமாக மோத வேண்டும்.  தள்ளி போவதற்கு ..கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லக்கூடாது என ப்ளூ சட்டை மாறன் சூர்யாவை நேரடியாகவே தாக்கியுள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்துடன் அஜித் நடித்த விசுவாசம் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த இரு படங்களிலுமே விசுவாசம் தான் அதிக வசூலை பெற்றது. தற்போது வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா? என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

Advertisement