• Aug 11 2025

தமன்னா மீது மதுபான ஊழல் புகார்? திரையுலகில் பரபரப்பு..!

luxshi / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா, தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து இந்திய அளவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 


இந்நிலையில் அவர் தற்போது மதுபான ஊழல் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமன்னாவின் “Wite & Gold” நிறுவனம் தொடர்பாக மதுபான ஊழல் மோசடி புகார் எழுந்துள்ளது.


ஆந்திராவில் 2019 முதல் 2024 வரை நடந்த மதுபான விற்பனை ஊழல் மோசடி  வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் ரெட்டியும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு ஆகியோர் கைதாகினர்.

இந்த மோசடி பணத்தின் மூலம் நடிகை தமன்னா நடத்தி வரும் ‛ஒயிட் அண்ட் கோல்டு' கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், தமன்னா வெங்கடேஷ் நாயுடு உடன் தனி விமானத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி சந்தேகத்தை எழுப்ப அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தென்னிந்திய திரையுலகிலும் பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement