• Aug 06 2025

அடிவி சேஷ் நடிக்கும் 'G2' பான் இந்தியத் திரைப்படம்...!வெளியீட்டு தேதி அறிவித்த படக்குழு!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் அடிவி சேஷ்.  இவர், தற்போது நடிக்கும் புதிய திரைப்படம் 'G2', ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


'G2' என்பது 2018-ம் ஆண்டு வெளியான ஹிட் திரைப்படமான 'Goodachari' யின் தொடர்ச்சி படம் ஆகும். இந்த திரில்லர் திரைப்படம் ஒரு பான் இந்தியத் தயாரிப்பாக உருவாகி வருகிறது, இதற்காக பெருமளவில் தொழில்நுட்பக் குழுவும், நட்சத்திரக் காம்போவுமும் இணைக்கப்பட்டுள்ளனர்.


படத்தின் தயாரிப்புக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதாவது, 'G2' படம் 2026-ம் ஆண்டு மே 1-ம் தேதி உலகளவில் வெளியிடப்படும் எனும் செய்தி. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன சாகசத் திரில்லராக உருவாகும் இந்த படத்தை திகில், உணர்ச்சி, அதிரடி என மூன்றும் கலந்த ஒரு புதிய வடிவில் உருவாக்கும் திட்டத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.


அடிவி சேஷ் தனது வித்தியாசமான கதைத்தேர்வுகளுக்காக பிரபலமானவர் என்பதால், 'G2'யின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement