திரையுலகில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தி, தனது சமூக சேவையின் மூலம் பலரது வாழ்க்கையில் ஒளியூட்டும் மனிதர் தான் நடிகர், நடன இயக்குநர், மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராகவா லாரன்ஸ். வெறும் திரையுலக சாதனைகளுக்குள் மட்டுமே இல்லாமல், மனதை நெகிழ வைக்கும் உதவித் திட்டங்களிலும் அவர் தனது இடத்தை உறுதியாக பதித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது அவர் 'கண்மணி அன்னதான விருந்து' என்ற புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளார். இது, அவர் தனது அம்மாவின் நினைவாக தொடங்கிய ஒர் உணவுத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் மூலம், "வசதி படைத்தவர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய உணவுகள் ஏழைகளுக்கும் கிடைக்கவேண்டும். உணவு என்பது எட்டாக் கனியல்ல.." என்கிறார் ராகவா லாரன்ஸ்.
'கண்மணி அன்னதான விருந்து' திட்டம் தொடங்கியதற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் இதற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
'கண்மணி அன்னதான விருந்து' என்பது வெறும் ஒரு திட்டம் அல்ல, அது பசியை தீர்க்கும் ஒரு முயற்சி. ராகவா லாரன்ஸ் தனது புகழை மட்டும் அல்ல, தனது நற்கருத்துகளையும் சமூகத்துடன் பகிர்ந்து, உண்மையான நாயகனாக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!