சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் முதன்முறையாக இணைந்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம், முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.65 கோடியை கடந்தது. தற்போது, இப்படம் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லன் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜாம்வால் மிரட்டியிருக்க, கதாநாயகியாக ருக்மணி வசந்த் அழகும் நடிப்பும் சேர்த்துக் கவர்ந்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை என்.வி. பிரசாத் தனது ஸ்ரீ லட்சுமி மூவீஸ் சார்பில் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியானது, மதராஸி பல மாநிலங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
படத்தின் திரைக்கதை, இயக்கம், இசை, மற்றும் நடிகர்களின் மெச்சத்தக்க நடிப்பு ஆகியவையால் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, எதிர்வரும் வாரங்களிலும் வசூல் அதிகரிக்கும் என திரையுலகம் எதிர்பார்க்கிறது. சிவகார்த்திகேயனின் தற்போதைய மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக ‘மதராஸி’ வகைப்படுத்தப்படுகிறது.
Listen News!