• Sep 21 2025

நாளை மறுதினம் பேரனுக்கு காதுகுத்து; மனம் போன போக்கில் விரைவில் போய்ட்டாரு.! சினேகன் வேதனை

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ரோபோ சங்கர். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில்  பங்கேற்று உள்ளார் .

தமிழகமெங்கும் பல ஊர்களுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வந்துள்ளார். இவர் நடிகராக மட்டம் இல்லாமல் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும்  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 

ரோபோ சங்கருக்கு சினிமாவிலும் பட வாய்ப்புகள் கிடைத்தன. அதிலும் இரும்புத்திரை, கலகலப்பு 2, மாரி, மாரி 2, மிஸ்டர் லோக்கல், விசுவாசம்,  வாயை மூடி பேசவும்  போன்ற பல படங்களில் இவருடைய காமெடி ரசிகர்களை கவர்ந்தது.  சமீபத்தில் கதாநாயகனாகவும் களம் இறங்கி இருந்தார் ரோபோ சங்கர். 


இந்த நிலையில், நாளை மறுதினம் பேரனுக்கு காதுகுத்து ஏற்பாடு செய்திருந்தால் ரோபோ சங்கர்.  தற்போது அவருடைய மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக  கவிஞர் சினேகன் தனது வேதனையை தெரிவித்துள்ளார். 


அதன்படி அவர் கூறுகையில் ,  ரோபோவின் முதல் மேடையில் இருந்து அவருடன் நான் இருந்திருக்கின்றேன். எந்த மேடை என்றாலும் அதை தனக்கானதாக மாற்றிக் கொள்வார். நாளை மறுதினம் அவருடைய பேரனுக்கு காதுகுத்து  விழாவை ஏற்பாடு செய்திருந்தார். 

தன் உடல் நிலையை அவர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என என்னைப் போல பல நண்பர்கள் அவரிடமே கவலை பட்டுள்ளோம்.  இந்த இடத்திற்கு கூட அவரை போராடி தான் கொண்டு வந்தோம். இருந்த போதும் மனம் சொன்னதை மட்டுமே கேட்டு செயல்பட்டார். அதன் விளைவாக இவ்வளவு விரைவாக நம்மை விட்டு சென்று  விட்டார். இந்த இழப்பில் இருந்து எப்படி வெளியே வரப் போகின்றோம் என தெரியவில்லை என்றார்.

Advertisement

Advertisement