• Dec 27 2024

விஜய்யின் நட்புக்காக அஜித் செய்யப்போகும் தரமான சம்பவம்! வெளியான தகவல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் தான் விஜய் அஜித் இவர்கள். தற்போது தற்போது வரையில் தமது புகழ் மறையாமல் வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார்கள். அதிலும் அஜித் படிப்படியாக தனது விடாமுயற்சியின் காரணமாக சினிமா துறையில் இன்று மிகப்பெரிய இடத்தை எட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி - கமல் பிரபலங்களுக்கு அடுத்த படியாக விஜய் - அஜித் தான் காணப்படுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இருவரும் ஒரே சமயத்தில் நுழைந்து இருந்தாலும் இவர்களுடைய படங்களில் வசனங்கள் மூலமாகவும் வரிகள் மூலமாகவும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போல காட்சிகள் இடம் பெற்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மோதலை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் இருவரும் உச்சத்திற்கு சென்ற பிறகு இது போன்ற வசனங்கள் இடம்பெறுவதில்லை.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு சினிமா துறையை விட்டு முழுவதும் வெளியேறப் போவதாக அறிவித்தார். இந்த சூழலில் விஜயின் 69 ஆவது படத்தை எச். வினோத் இயக்க உள்ளார் என அதிகாரவூர்வமாகவே தகவல் வெளியானது.

இந்த நிலையில், அஜித் தனது நண்பர் விஜய்க்காக குட் பேட் அக்லி படத்தில் விஜயின் பிரபல வசனம் ஒன்றை பேசப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் உருவாக உள்ளது. இதில் விஜயின் இத்தனை ஆண்டுகால திரைப்பட சேவையை பாராட்டும் விதமாக அஜித் வசனங்களை பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement