சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணிட அம்மா ரோகிணியை பார்த்து நீ எப்புடியாவது உண்மையை சொல்லிடு என்கிறார். அதைக் கேட்ட ரோகிணி சும்மா பைத்தியக்காரத் தனமா பேசிக் கொண்டிருக்காத என்று சொல்லுறார். மேலும், உண்மை தெரிஞ்சால் கிரிஷ் மட்டும் இல்ல நானும் அந்த வீட்டில இருக்க முடியாது என்கிறார். இதனை அடுத்து முத்துவும் மீனாவும் கிரிஷுக்கு dress எடுத்துக் கொடுக்கிறதைப் பார்த்த விஜயா பேசிக் கொண்டிருக்கிறார்.
பின் கிரிஷ் விஜயா வீட்ட இருந்த எல்லாருக்கும் நான் வீட்ட போய்ட்டு வாறன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். இதனை அடுத்து மீனாவும் முத்துவும் கிரிஷை கூட்டிக் கொண்டு ஹாஸ்பிடலுக்குப் போகிறார்கள். அங்க கிரிஷோட பாட்டியை காணேல என்றவுடனே மீனா ஷாக் ஆகுறார். பின் முத்துவுக்கு அங்கிருந்த ஒராள் அவங்க நேற்று இரவே ஹாஸ்பிடலில இருந்து போய்ட்டாங்க என்று சொல்லுறார்.
அதனைத் தொடர்ந்து கிரிஷ் பாட்டியைப் பார்க்கணும் என்று அழுதுகொண்டிருக்கிறார். அந்த விஷயம் ரோகிணிக்கு தெரியவந்து அம்மா எங்க போயிருப்பாங்க என்று தேடிக்கொண்டிருக்கிறார். பின் ஷோரூமில வேலை செய்யுற ஒராள் தங்கட பாட்டியை ரெண்டு நாளா காணேல இண்டைக்கு அவங்க இறந்திட்டாங்க எனக்கு லீவு வேணும் என்று கேட்கிறார். அதைக் கேட்ட ரோகிணி அம்மாவும் அப்புடி ஏதாவது செய்திட்டால் என்ன பண்ணுறது என்று ஜோசிக்கிறார்.
பின் முத்து அங்கிருந்த ஒராளுக்கு காசு கொடுத்திட்டு ஹாஸ்பிடல் cctv கமெரா பார்த்து சொல்லுவியா என்று கேட்கிறார். இதனை அடுத்து அந்த ஆள் cctv பார்த்திட்டு முத்து கிட்ட நடந்ததை சொல்லுறார். பின் மீனா கிரிஷை மறுபடியும் வீட்ட கூட்டிக் கொண்டு வந்ததைப் பார்த்த விஜயா நல்லா அந்த பையனை வளர்த்து விடு என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!