• Dec 26 2024

மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணையும் ‘விக்ரம்’ அமர்.. ரஜினிக்கு வில்லனா? ‘கூலி’ அப்டேட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் அமர் என்ற கேரக்டரில் நடித்த பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கூலி’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘விக்ரம்’ திரைப்படத்தில் கிட்டத்தட்ட முதல் பாதி முழுவதும் பகத் பாசில் காட்சி தான் இருக்கும் என்பதும் அந்த படத்தில் அவர் நடிப்பில் அசத்தியிருப்பார் என்பதும் தெரிந்தது. அமர் என்ற கேரக்டராகவே பாசில், படத்தில் வாழ்ந்த அவர், ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கூலி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படத்தில் இவர்தான் முக்கிய வில்லன் என்று கூறப்படுகிறது.



ஏற்கனவே இந்த கேரக்டரில் நடிப்பதற்கு தான் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அவர் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்டதால் ரஜினியின் நண்பர் கேரக்டருக்கு அவரை மாற்றிவிட்டு வில்லன் கேரக்டரில் பகத் பாசிலை லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் இவர் தான் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படத்தில் பகத் பாசில் நடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் பகத் பாசில் ஒப்பந்தம் ஆகி வருவதை அடுத்து அவருக்கு தமிழ் திரை உலகில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் படப்பிடிப்புக்கு தேவையான பணிகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement