• Jul 25 2025

புது கார் நல்லா ஓஹோனு ஓடனும்பா முருகா..! வைரலாகும் ஜோகிபாபுவின் சாமி தரிசன வீடியோ..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தனக்கென ஒரு தனித்துவமான தோற்றம், நையாண்டி வசனங்கள் கொண்ட சிறந்த காமெடி நடிகராக வலம் வரும் இவர், சமீபகாலமாக கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் வலம் வருகிறார்.


சமீபத்தில் இவர் "கோலமாவு கோகிலா" மற்றும் "மண்டேலா" போன்ற படங்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது, தனது புது கார் வாங்கிய மகிழ்ச்சியில், முருக பக்தராக, ஐந்தாம் படை முருகன் என அழைக்கப்படும் முருகர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தது வைரலாகி வருகிறது.

அங்கு ஜோகிபாபு தனது 'புது கார் நல்லா  ஓஹோனு ஓடனும்பா முருகா..!' என்று மனதார கூறி, அர்ச்சனை செய்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.


கோவிலில் யோகி பாபுவை நேரில் பார்த்த மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கோவில் வளாகத்தில் அவர் அடையாளம் காணப்பட்ட உடனே, ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Advertisement

Advertisement