தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வடிவேலு. இவருடைய நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் மெகா பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. அதன் பின்பு பகத் பாசிலுடன் மீண்டும் இணைந்து மாரீசன் படத்தில் நடித்திருந்தார்.
என் தங்கை கல்யாணி என்ற படத்தின் மூலம் சின்ன ரோலில் அறிமுகமானவர் வடிவேலு. அதன் பின்பு என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் முழு நேர நடிகராகவே மாறினார். தனது முதல் படத்திலிருந்தே வெள்ளந்தியான நடிப்பு, வித்தியாசமான மொழி நடை பாவனையையும் வெளிக்காட்டி தனக்கென தனி முத்திரையை பதித்தார்.
இதை தொடர்ந்து பிரபல காமெடி நடிகர்களான செந்தில், கவுண்டமணி ஆகியவர்களுடனும் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் செந்திலுக்கும் கவுண்டமணிக்கும் வாய்ப்புகள் குறைய வடிவேலுக்கு குவியத் தொடங்கின.
ஒரு கட்டத்தில் அரசியலிலும் நுழைந்தார் வடிவேலு. இது அவருடைய சினிமா கேரியரை படுகுழிக்குள் கொண்டு சென்றது. இதனாலையே பல ஆண்டுகளாக முடங்கி கிடந்தார். அதன் பின்பு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது வரை சினிமாவில் பயணித்து வருகின்றார்.
இந்த நிலையில், பிரபல காமெடி நடிகர் வடிவேலு பற்றி இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், என்னை பொருத்தவரை தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான். அவருக்கு படிப்பு கிடையாது. சினிமாவிலும் பின்புலம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு படத்திலும் அதற்கேற்ற கதாபாத்திரமாகவே வாழ்வார். அவர் வெறும் காமெடி நடிகர் மட்டும் கிடையாது அந்த கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
Listen News!