ஹிரித்திக் ரோஷன் - ஜீனியர் என்டிஆர் இணைந்து நடித்த வார் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
இந்த படத்தில் ஜீனியர் என்டிஆர் மற்றும் ஹிரித்திக் ரோஷன் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளார்கள். இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக களம் இறங்கி உள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் ரிலீஸான வார் 2 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை ட்விட்டர் விமர்சனத்தின் ஊடாக பார்ப்போம்.
இந்த படம் ஜப்பானில் ஆரம்பிப்பதோடு ஹிரித்திக் ரோஷனின் ஆக்ஷன் காட்சிகளுடன் கதை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கிய சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு ஜீனியர் என்டிஆர் என்ட்ரி கொடுக்கிறார். அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த படத்தில் என்டிஆரும் ஹிரித்திக் ரோஷனும் போட்டி போட்டு நடித்துள்ள காட்சிகள் சிறப்பம்சமாக காணப்படுகிறது. முதல் பாதியில் ஜப்பானில் ஆக்சன் காட்சிகளும் என்.டி.ஆரின் என்ட்ரி சீனையும் இயக்குனர் சிறப்பாக காட்டியுள்ளார். ஆனாலும் முதல் பாதியில் சில குறைகளும் காணப்படுகின்றன.
இன்னுமொருவர் கூறுகையில், இந்த கதையிலும் புதுமை இல்லை. ஆனால் சில ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக காட்டப்பட்டுள்ளன. ஹிரித்திக் ரோஷன் அசத்தலாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு சிறப்பாக காணப்படுகின்றது. 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அளவுக்கு இதில் கதையும் இல்லை உணர்ச்சிபூர்வமான ஆழமும் இல்லை. ஆக்சன் காட்சிகளுக்கு மட்டுமே இந்த படம் திரில்லாக காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஒரு ரசிகர் கூறுகையில், இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் கனெக்ட் ஆகவில்லை. பல இடங்களில் இயக்குனர் காட்சிகளை தவற விட்டுள்ளார். இந்த படம் சராசரி படமாகவே அமைந்துள்ளது. இரண்டாம் பாதியிலும் வேகத்தை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அது நடை பெறவில்லை இந்த படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகள் குறைவாகவே காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
Listen News!