• Aug 10 2025

‘கிங்டம்’ திரைப்படம் சர்ச்சையில்!திரையரங்குகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவு!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த ‘கிங்டம்’ திரைப்படம் எதிர்ப்புகள் மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், இலங்கை தமிழர்கள் குறித்த விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.


இந்த படத்தில், இலங்கை தமிழர் தலைவராக "முருகன்" எனும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் கொடியவர்களாகவும், அந்த தலைவனை வீழ்த்தி விஜய் தேவர்கொண்டா ஆட்சி அமைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தமிழர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்படம் தமிழர்களை இழிவுபடுத்துகிறது எனக் குற்றம்சாட்டி, இதைத் திரையிடக்கூடாது என வலியுறுத்தியிருந்தார். மேலும், திரைப்படம் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டால் முற்றுகையிடப் படும் என்றும் எச்சரித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து, சில திரையரங்குகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ‘கிங்டம்’ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. படம் தொடர்பான எதிர்ப்புகள் சூடுபிடித்துள்ள நிலையில், காவல் பாதுகாப்பு உத்தரவு திரையரங்குகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பிற்காக ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement