• Sep 21 2025

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...!கமல்ஹாசன் இரங்கல் பதிவு...!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறுநீரக பாதிப்பு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 18, 2025 அன்று காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ரோபோ சங்கர், தனக்கென ஒரு தனி முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பல்வேறு தளங்களில் தனது நகைச்சுவைத் திறமையால் அனைவரையும் கவர்ந்தவர். 


இந்த நிலையில், நடிகரும் மக்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது எக்ஸ் கணக்கில், ரோபோ சங்கரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்: “ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று தெரிவித்தார்.

இரங்கல் செய்திகள் தொடர்ந்து எழுச்சி பெறும் நிலையில், ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

Advertisement

Advertisement