• Sep 21 2025

உடல்நலக்குறைவால் ரோபோ சங்கர் காலமானார்…!திரையுலகம் அதிர்ச்சி மற்றும் சோகத்தில்...!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும், மிமிக்ரி கலைஞருமான ரோபோ சங்கர் இன்று  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவ பரிசோதனைகளில், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் சிகிச்சைக்குப் நல்ல பதிலளித்த அவர், பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் ஐசியூவில் வைத்தே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகத்தையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ரோபோ சங்கர், விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக வெள்ளித்திரையில் அறிமுகமானவர். தனது நடன திறமை, நகைச்சுவை நேர்த்தி ஆகியவற்றால் பாராட்டைப் பெற்றார். பின்னர், தனுஷ் நடித்த "மாரி" உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தனது தனித்துவமான நடிப்பு, அழகான நேர்த்தியான டயலாக் டெலிவரி மற்றும் மனிதநேயத்துடன் கலந்த நகைச்சுவையால், பலரால் நேசிக்கப்பட்டவர் ரோபோ சங்கர். அவரின் மறைவு தமிழ்த்திரையுலகத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Advertisement

Advertisement