• Sep 01 2025

துல்கர் சல்மானை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்..! தியேட்டரில் மோதவரும் இரு படங்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் ஒரே நேரத்தில் வரவேற்பைப் பெறும் இரண்டு முக்கியமான நடிகர்கள், சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான். கடந்த ஆண்டும் இருவரது படங்கள் நேரடியாக மோதியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மோதலில் யாருக்கு முன்னிலை கிடைத்தது என்ற விவாதம் இன்றும் தொடர்கின்றது.


இந்நிலையில், 2025-ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, மீண்டும் ஒருமுறை இருவரும் திரைபட மோதலுக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2024ல், ஒரே நாளில் வெளியாகிய அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் மாறுபட்ட ஸ்டைலில், தனித்துவமான கதைகளுடன், தலைசிறந்த ஹீரோக்களுடன் வந்தாலும், ஒரே நாளில் திரைக்கு வந்து ரசிகர்களை கலக்கியிருந்தது.


தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 2025 செப்டம்பர் 5ம் தேதி, சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படமும், துல்கர் சல்மானின் 'காந்தா' திரைப்படமும் ஒரே நாளில் திரைக்கு வரவிருக்கின்றன. இருவரும் தங்களது ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட fan pageஐ கொண்டிருப்பதால், இந்த முறை box office மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement