சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த ஒரு இனிய செய்தி தற்போது வெளிவந்துள்ளது. விஜய் டிவியின் புகழ்பெற்ற சீரியல் 'பாரதி கண்ணம்மா'வில் ஹீரோவாக நடித்த அருண் பிரசாத் மற்றும் பிக் பாஸ் சீசன் 7 வின் வெற்றியாளர் அர்ச்சனா ஆகியோர் தற்போது நிச்சயதார்த்தத்தில் இணைந்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அருண் பிரசாத், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்ததன் மூலம், இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருண் பிரசாத் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பாரதி கண்ணம்மா" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவரது நடிப்பு, தோற்றம் என்பவற்றால் ரசிகர்களின் மனதை வெகுவாக ஈர்த்தார்.
அதே நேரத்தில், அர்ச்சனாவும் அதே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ் சீசன் 7. அந்த சீசனில் அர்ச்சனா, தனது நேர்மை மற்றும் நிதானம் என்பவற்றால் பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றார். இறுதியில், டைட்டிலை வென்று வரலாற்று சாதனையும் படைத்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் முன்பே அருண் மற்றும் அர்ச்சனா நல்ல நண்பர்களாக இருந்தனர். அந்த நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் சமூக ஊடகங்களில் தங்களது உறவை துல்லியமாகத் தெரிவித்துவிட்டாலும், அவர்கள் திருமண திட்டங்கள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வழங்கவில்லை.
இது ரசிகர்களிடையே பல கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போலவே, தற்போது இருவரும் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டனர். அருண் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அர்ச்சனாவுடன் நிச்சயதார்த்த விழாவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Listen News!