• Jul 18 2025

"பன் பட்டர் ஜாம்" படத்திற்கு மக்களிடம் இப்டி ஒரு வரவேற்பா.? வெளியான ரிவ்யூ இதோ...

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் ராஜூ. சிறிய திரையில் தனது நகைச்சுவை மற்றும் நேர்மையான நடைமுறையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர், தற்போது பெரிய திரையில் முக்கிய கட்டத்தைக் கடந்துள்ளார்.


இன்று வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம் மூலம், ராஜூ தனது ஹீரோயிஷத்தை நிரூபிக்க ஒரு முக்கியமான முயற்சியை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ரசிகர்கள், விமர்சகர்கள் எனப் பலரும் இப்படத்தின் மீது ஓரளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

படத்தின் தலைப்பு நன்றாக இருக்கிறது. குழந்தைகளை நினைவுபடுத்தும் மாதிரியான பெயர், ஆனால் அதன் கதையமைப்பு மற்றும் கதையின் திசை மாறுபட்ட ஒன்று. ஒரு சாதாரண குடும்ப சூழலில் தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் கொண்டுசெல்லும் இந்தக் கதையில், காதல், குடும்பம், நகைச்சுவை, உணர்ச்சி ஆகியவை கலந்து கொடுக்கப்பட்டுள்ளன.


படம் பார்க்க வந்த ஒரு ரசிகர், “இந்தப் படம் நன்றாகத் தான் இருந்தது. எனக்கு திருப்தியையும் கொடுத்திருக்கிறது. படத்தின் முடிவு வித்தியாசமாக இருந்தது. ராஜுவின் நடிப்பை பார்க்கும்போது அவருக்கு இது முதல் படம் என்பது போல தெரியவில்லை.” என்றார். 

மேலும் சில ரசிகர்கள் இப்படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் வந்து அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இவ்வாறாக இயக்குநர் ராகவ் மிர்தாத், தனது எளிய கதையமைப்பால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement