சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நடிகர் விஜயின் அரசியல் மாநாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழகத்தின் புதிய அரசியல் தலைவராக விஜய் எழும்பப் போகிறாரா?’ என்ற எதிர்பார்ப்புகள் சூடு பிடித்திருக்கும் நேரத்தில், அவரது பேச்சுகள், குறிப்பாக பிரதமர் மோடி பற்றிய விமர்சனங்கள், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த மாநாட்டின் பின்னணியில், தற்போது நடிகரும், சமுதாய செயற்பாட்டாளருமான ரஞ்சித் அவர்கள் வெளியிட்ட கருத்துகள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜயின் பேச்சை கடுமையாக விமர்சித்தார்.
ரஞ்சித் அதன் போது விஜய்க்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, “அமெரிக்காவே வியந்து பார்க்கிற பிரதமர் மோடியை கை சொடக்கு போட்டு MR. MODIங்கிற. ஏண்டா அறிவில்ல, எனக்கு வாற கோபத்துக்கு ஓங்கி ஒரு குத்து குத்தணும்னு தோணுது. ஆனா எல்லாத்தையும் ஓட்டுல குத்துங்க..!!" என்று கூறியுள்ளார் ரஞ்சித். இந்த வார்த்தைகள் நிகழ்வில் இருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!