தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகரான கோட்டா சீனிவாச ராவ், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சீராக இல்லாமல், தொடர்ந்து சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணம் திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லன் கதாபாத்திரங்களிலும், முக்கிய துணை வேடங்களிலும் தனது அழுத்தமான முகபாவனைகளால் ரசிகர்களை கவர்ந்தவர் கோட்டா சீனிவாச ராவ். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களின் நினைவில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கின்றன.
கோட்டா சீனிவாச ராவ் சுமார் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகரின் மறைவு அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!