• Jul 18 2025

அட்லீ படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலம்...!யார் தெரியுமா? வைரலாகும் பதிவு....!

Roshika / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ, தற்போது இந்திய மட்டுமல்லாமல் உலக சினிமா ரசிகர்களையும் கவரும் அளவுக்கு தனது அடுத்த திட்டத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். “ஜவான்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்த முறையும் ஒரு பான் இந்தியன் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணிபுரிந்து வருகிறார்.


இந்த புதிய படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. தற்போது, படத்தின் கதாபாத்திரங்களுக்கான தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீப தகவலின்படி, இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து முன்னணி நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.

அந்த ஹீரோயின்களின் பட்டியலில் முக்கியமான பெயராக தீபிகா படுகோனே இருக்கிறார். அவருடன் இணைந்து ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.


அட்லீ, இந்த படத்தை “ஜவான்” விட மேலும் பெரிய வெற்றி படமாக்கும் நோக்கில் திட்டமிட்டு வருகிறார். அதற்காக கதையின் வலிமையுடன் கூடிய வில்லன் பாத்திரமும் மிக முக்கியமாக கருதப்பட்டு வருகிறது. இதற்காகவே ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் தற்போது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்கார் விருது பெற்ற வில் ஸ்மித், சராசரியாக ஒரு படத்திற்கு ரூ.300 கோடி வரை சம்பளம் வாங்கக் கூடியவர். இந்திய படத்திற்காக குறைந்தபட்சம் ரூ.250 கோடி வரை சம்பளம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இது இந்திய சினிமாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சம்பள ஒப்பந்தமாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. இசை அமைப்பாளராக அட்லீ, தொடர்ந்து தனது படங்களில் பணியாற்றிய அனிருத்தை விலக்கி, சாய் அபயங்கர் என்ற இசை அமைப்பாளரை இந்தப் படத்திற்காக லாக் செய்துள்ளார். இது அவரது படங்களில் ஒரு புதிய முயற்சியாகும்.


இந்த மெகா படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.800 கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது. இது இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாகவும், உலக அளவில் எதிர்பார்க்கப்படும் ப்ராஜெக்டாகவும் உருவெடுத்துள்ளது.

Advertisement

Advertisement