தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் ரூ. 355 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் புதிய படமான ‘கூலி’ எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் உலகெங்கிலும் அதிரடி வெற்றி கண்டுள்ளன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து, இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார்.
இதனிடையே அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் பிரீமியர் ஷோவிற்கு 50,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யபட்டு சாதனை படைத்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியா பகுதிகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
இதனால், ‘கூலி’ படம் முன்பதிவுகளில் 50 கோடியை கடந்து, வெளியீட்டுக்குப் பிறகும் பார்வையாளர்களிடையே மாஸ் ஹிட் படமாக இருப்பது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க போகிறது என்பதுடன் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் திரைப்படத்தை பார்க்க காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!