‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகை இந்துஜா, தனது திறைமையால் பிகில், பார்க்கிங் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைச் சொந்தமாக வைத்திருக்கிறார்.
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை இந்துஜா, தினத்தின் தொடக்கத்தை ஆன்மீகமாக, அமைதியான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, சென்னையின் அருகில் அமைந்துள்ள ஸ்ரீவபுரி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
கோவிலில் தெய்வீக சூழலில், முருகப்பெருமானின் அருளைப் பெற்று, புத்தாண்டை அமைதியுடனும் நம்பிக்கையுடனும் துவக்கியுள்ளார். கோவிலின் சாந்தமான சூழல் மற்றும் ஆன்மீக ஈர்ப்பு, இந்துஜாவின் சிறப்பு நாளுக்கு ஒரு புதிய அர்த்தத்தை வழங்கியது.
அவரது கோவில் வழிபாட்டு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்களும், சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!