• Aug 02 2025

தாயின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் நடனமாடிய ராபர்ட்.! வைரலான வீடியோ!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடன இயக்குநர்களில் ஒருவர் ராபர்ட் மாஸ்டர். 90-களில் இருந்து இன்று வரை தமிழ் திரைத்துறையில் தனது தனித்துவமான நடனத் திறமையால் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றுள்ளார். ஆரம்பத்தில் பிரபுதேவா நடித்த திரைப்படங்களில் அவருக்கு பின்னணியில் நடனம் ஆடிய ராபர்ட், பின்னர் தனித்து ஆடும் நடன இயக்குநராக உயர்ந்தார்.


தனது தனித்துவமான நடன அணுகுமுறை மூலம் பிரபலமான இவர் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து Mrs & Mr எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தும் இருந்தார். இப்படத்தை வனிதாவே இயக்கியிருந்தார்.

சமீபத்தில் ராபர்ட் மாஸ்டரின் தாயார் காலமானார். இந்த செய்தி அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியது. தாயாரின் இறுதி ஊர்வலத்தில், ராபர்ட் மாஸ்டர் நடனம் ஆடி உள்ளார்.


அவரது அந்த நெகிழ்வான செயல், பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு கலைஞனாக தனது அன்பை நடனத்தின் மூலமாக வெளிப்படுத்திய ராபர்ட் மாஸ்டர் தற்போது தாயாரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement