தமிழ் சினிமாவுக்குள் புதுமுகமாக கால் பதிக்கும் நடிகர் விஜய் கெளரிஷ், இயக்குநர் எஸ். எஸ். முருகராசு இயக்கும் "கடுக்கா" திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவரது அறிமுகம் மட்டுமின்றி, இப்படம் சமூக உணர்வுள்ள, ஆக்ஷன் கலந்த திரைபடமாக அமைந்துள்ளதனை டீசர் மூலம் அறியமுடிகிறது.
"கடுக்கா" படத்தின் அதிகாரபூர்வ டீசர் தற்போது யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “கடுக்கா” படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஒரு தீவிரமான ஆளுமையை கொண்டது. டீசரில் அவரது சீன்கள் ரசிகர்களிடம் நல்ல first impression-ஐ ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ஸ்மேகா, ஆதர்ஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அத்துடன், “கடுக்கா” திரைப்படம், 2025 ஆகஸ்ட் 27 திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!