• Dec 25 2024

சிறுவயதில் அந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட நடிகை நக்மா - திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இது தான் காரணமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1974 டிசம்பர் 25 மும்பையில் பிறந்தார் இப்போ இவங்களுக்கு வயது 48 இன்னமும் திருமணம் ஆகவில்லை நடிகை நக்மாவின் அப்பா மொரார்ஜி பரம்பரையைச் சேர்ந்தவங்க. ராஜஸ்தானில் அப்பாவின்  ஃபமிலி  பரம்பரை  பிசினஸ்  ஃபேமிலி சேர்ந்தவங்க . அவங்களுடைய அப்பா பேமிலி ராஜஸ்தானில் இருந்தாங்க அப்புறம் குஜராத்தில்  அப்புறம் மும்பையில் செட்டில் ஆயிட்டாங்க நடிகை நக்மாவின் அம்மா முஸ்லிமை  சேர்ந்தவங்க இவரின் அம்மா அப்பா இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனாலும் அவர்களுக்கு இடையில் ஏற்பட கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் விவாகரத்து வாங்கினாங்க நக்மா ரொம்ப சின்ன வயசுல அப்பா அம்மா விவாகரத்து வாங்கினதால நக்மா சிறுவயதிலேயே இந்த விஷயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .

பின்பு இவரது அம்மா, பிலிம் ப்ரொடியூசர் திருமணம் செய்து கொண்டார் ஆகவே இவர்களுக்கு பிறந்த பசங்க தான் ஜோதிகா சூரஜ் மற்றும் ரோஷினி.  அப்பா வேற வேற ஆக இருந்தாலும் அம்மா ஒன்று என்பதால் இப்போவாரைக்கும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.


இவரது இரண்டாவது அப்பா சந்தர் சாதனா மூலம் தான் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது இவங்களது அம்மாவும் நடிக்க ரொம்பவே சப்போர்ட் பண்ணி இருக்காங்க.இவர் முதலில் ஹிந்தியில் நடித்த படம் பாக்கி.இதன் மூலம் பிலிம் இண்டஸ்ட்ரில அறிமுகமானார்.இந்த படம் ரொம்ப ஹிட் ஆகிச்சு.அதுக்கப்புறம் தெலுங்கில் பட வாய்ப்புக்கள் வர ஆரம்பித்தது .பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.


இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் 1994 ஆம் ஆண்டு காதலன் என்ற படத்தில் பிரபுதேவாக்கு ஜோடியாக நடிக்க வைச்சாரு.இந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆகிடிச்சு.அதுக்குப்புறம் பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.தொடர்ந்து ரகசிய போலீஸ்,வில்லாதி வில்லன்,பெரிய தம்பி ,பிஸ்தா போன்ற படங்களில் நடித்தார்.சிட்டிசன் படத்தில் முக்கிய ட்ரோலில் நடிச்சாங்க.இது தான் தமிழின் கடைசி படம். அதுக்கப்புறம் பஞ்சாபி ,மராத்தி,பெங்காளி போன்ற மொழிகளில் நடித்தார்.2008 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.அரசியலில் இறங்கிட்டாங்க.அப்பா,அம்மாக்கு விவாகரத்து ஆனதால் பாதிக்கப்பட்டதால் கடைசி வரைக்கும் திருமணம் செய்ய கூடாது அப்பிடின்னு முடிவு பண்ணிட்டாங்க.

மக்களுக்கு பல நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என பல பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்காரு.ஆல் இந்தியா மஹிளா காங்கிரஸ் -இல் ஜென்ரல் செக்கிரட்டியா இருக்காங்க.இதில் சேர்ந்ததன் நோக்கம் நிறைய பெண்களுக்கு அவங்க வாழ்க்கைக்கு புதுசு புதுசா நிறைய பண்ணனும்ன்னு சொல்லியிருக்காங்க.

நடிகர் சரத்குமார் அவரது மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணம் நக்மாவுடன் இருந்த உறவு தான் என்று அவரது மனைவி சாயா சொன்னதாக இப்போவாரைக்கும் சோசியல் மீடியாவில் இருக்கு. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement