விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் இருந்து மீனா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா, தற்போது தனது திருமணத்துக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக மலையாள ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, கோமதி பிரியா, மலையாள சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார் என்றும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணக் கோலத்தில் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் ரெடி… இது உண்மையான காதல்,” என ஆழமான உணர்வுடன் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது. அதாவது, திருமணத்துக்குப் பிறகு சீரியலில் இருந்து அவர் விலகப்போகிறார் என்பதே அது.
ஏற்கனவே நடிகை கோமதி பிரியா பல சீரியல்களில் நடித்து வரும் நிலையில், புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் என்பதால், வேலைப் பளு குறைக்க விரும்புவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ‘சிறகடிக்க ஆசை’யில் மீனாவின் காரெக்டருக்கு மாற்றாக மற்றொரு பிரபல நடிகை வர உள்ளதாகவும், அதற்காக ஆலியா மானசா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆலியா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘இனியா’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த மாற்றம் குறித்து ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பழனியப்பன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
‘சிறகடிக்க ஆசை’ தொடரில் இருந்து “கோமதி பிரியா விலகுவதாகப் பரவும் தகவல்களில் எதுவும் உறுதி இல்லை,” என அவர் கூறியுள்ளார்.

எனினும் கோமதி பிரியா இதுகுறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வருகிறார். இதன் காரணமாகவே இந்த தகவல்கள் மேலும் வலுப்பெற்று வருகின்றன.
தற்போது கோமதி பிரியா திருமணமான பிறகு சீரியலில் தொடர்வாரா? அல்லது முழுமையாக விலகுவாரா? என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Listen News!