• Jun 07 2025

அஜித்துக்கு 3 வேடம், 3 ஹீரோயின்.. ‘குட் பேட் அக்லி’ படத்தை கலர்ஃபுல் ஆகும் ஆதிக்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு மூன்று வேடம் என்று செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் 3 நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் மூவரையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தேர்வு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் அறிமுக பாடல் படமாக்கப்பட இருப்பதாகவும் இந்த பாடலில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் டான்ஸர்கள் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.



இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் மூன்று கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்கள் ஸ்ரீலீலா, நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது மூன்றாவது அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று நாயகிகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் ’வரலாறு’ திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் மூன்று கேரக்டர்கள் அட்டகாசமாக இருக்கும் என்றும் அதேபோல் மூன்று நாயகிகள் இந்த படத்தின் பிளஸ் ஆக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement