• Apr 07 2026

கென் கருணாஸின் முதல் படம் எப்படி.? 'யூத்' ட்விட்டர் விமர்சனங்கள் இதோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’  படம் இன்றைய தினம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படத்திற்கு G. V. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘யூத்’  படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

அதன்படி, இந்த படத்தின் முதல் பாதி நகைச்சுவையால் நிறைந்ததாகவும், இரண்டாம் பாதி சற்றே எமோஷனலாக இருந்ததாகவும், இறுதியில் நல்ல மெசேஜுடன் இந்த படம் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அனிஷ்மா, சுராஜ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும், ஜிவி பிரகாஷ் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

மேலும் இந்த படம் இளைஞர்களின் உணர்வுகளை அழகாக சித்தரித்துள்ளது. இந்த படத்தில் கென் கருணாஸ் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் இளமையின்  உற்சாகத்தையும் உணர்வுகளையும் திரையில் கொண்டு வந்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது.

கிளைமாக்ஸ் காட்சிகள் மனதை ஆழமாக எடுத்துக் கூறியுள்ளன. ஆக மொத்தத்தில் இந்த படம் குடும்பத்தினரோடு ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படம் என பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement