• Apr 07 2026

முத்து யார்? நல்லவனா, காட்டானா.? 'முத்து என்கிற காட்டான்' விமர்சனம்!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் 'முத்து என்கிற காட்டான்' வெப் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

இந்த வெப் தொடர் ஒரு திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பல கோணங்களில் முத்து என்ற கதாபாத்திரம் வாழ்ந்துள்ளது. எனவே இதன் விமர்சனத்தை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் 'முத்து என்கிற காட்டான்' வெப் தொடரின் கதை ஆரம்பிக்கும்போதே ஒரு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் எதுவும் இல்லாமல் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அதே நேரத்தில் காட்டுப் பகுதி ஒன்றில் விஜய் சேதுபதியின் தலை மட்டும் கிடைக்கிறது. 

அதற்கு அருகிலேயே கொஞ்சம் பணமும் தன்னை அடக்கம் செய்யும்படி ஒரு கடிதமும் காணப்படுகிறது. அதற்கு பின்பு அந்த தலைக்கு சொந்தமானவர் யார் என்று விசாரணைகளை மேற்கொள்ளும்போது முத்து பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சொல்கின்றனர்.


அதன்படி ஒருவர் முத்து வாட்ச் மெக்கானிக் என்றும், கேரளாவில் பாகன் என்றும், ஆட்டுப் புழுக்கை வியாபாரியாக இருந்தார் என்றும், கண்மணி டான்ஸ் குழுவில் பாதுகாவலராக இருந்தார் என்றும் பல தகவல்களை கூறுகின்றனர். 

மேலும் அவர் பணத்தை பலருக்காகவும் செலவழிக்கும் நல்ல மனிதர் என்றும் புகழ்கின்றனர். ஆனால் சிலர் அவரை காட்டான் என்கின்றனர். நல்ல மனிதனாக இருந்த முத்து எப்படி காட்டானாக மாறுகிறார் என்பதுதான் அடுத்தடுத்த எபிசோடுகளில் எடுத்துக்காட்டப்படுகிறது.


இந்த வெப் தொடர் மொத்தமாக 10 எபிசோடுகளை கொண்டுள்ளது. இதில் வடிவேல் முருகன், முத்துக்குமார், சிங்கம்புலி ஆகியோர் தமது நடிப்பை மனிதநேயத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர். கிராமத்தில் காணப்பட்ட இயற்கை காட்சிகளும் கிளைமாக்ஸில் எதிர்பாராத ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போட வைத்துள்ளன.

ஆரம்பத்தில் அந்த தலை யாருடையது, விஜய் சேதுபதியை கொன்றது யார், எதற்காக அந்த தலை இப்படி இருக்கிறது என்று பல கேள்விகள் காணப்படுகின்றன. எனினும் பிக் பாஸ் விஜய் பார்வதியின் குடும்ப வாழ்க்கை காட்சிகள் தேவையற்றதாகவும் ரசிகர்களை வெறுப்படையச் செய்வதாகவும் காணப்படுகிறது.

ஆக மொத்தத்தில் 'முத்து என்கிற காட்டான்' வெப் தொடர் ஒரு மனிதனை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement