• Dec 26 2024

ஷாலினிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அட்மிட்? அஜித் அவசர அவசரமாக சென்னை வந்தது இதுக்குத்தானா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் திடீரென அவர் நேற்று சென்னை திரும்பினார் என்பதும் ஒரு சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சென்னை வந்திருப்பதாகவும் அந்த பணிகளை முடித்தவுடன் அவர் மீண்டும் அஜர்பைஜான் செல்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கு சர்ஜரி செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டதால் தான் அஜித் தனது மனைவியை பார்க்க அவசரமாக கிளம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அஜித்துக்கு தனது மனைவிக்கு சர்ஜரி என்பது முன்பே தெரியும் என்றும் இருப்பினும் தனது தொழில் பக்தி காரணமாக அவர் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தற்போது சர்ஜரி முடிவடைந்து ஷாலினி அஜித் நன்றாக இருப்பதாகவும் எனவே தான் அவரை பார்ப்பதற்காக ஒரு சிறு இடைவெளி எடுத்து அவர் சென்னை வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் ஒரு சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளி வந்து கொண்டிருந்தாலும் அஜித் தரப்பிலிருந்தோ அல்லது அவரது மேனேஜர் தரப்பில் இருந்தோ இது குறித்த செய்தி உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது அஜித் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டால் மட்டுமே உறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் வரை அஜர்பைஜானில் நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு ஒரு சில நாட்கள் மட்டும் ஓய்வு எடுத்து விட்டு அஜித் மீண்டும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement