• Dec 27 2024

சமூக வலைத்தளங்களில் ஃபேக் அக்கவுண்ட்களை தொடங்கிய நடிகை.. பதிலடி கொடுக்க இப்படியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஒருவர் சமூக வலைதளங்களில் ஃபேக் அக்கவுண்ட்களை தொடங்கியுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக நடிகர், நடிகைகள் பெயரில் ஃபேக் அக்கவுண்ட்களை சிலர் தொடங்குவார்கள் அல்லது ஃபேன் பேஜ் என்ற அக்கவுண்டுகளை தொடங்கி அதில் சில கருத்துக்களை ரசிகர்களே பகிர்ந்து வருவார்கள் என்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் தனுஷ் நடித்த ’அனேகன்’ உள்பட சில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி படங்களிலும் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் தனது உதவியாளர்களை வைத்து சில ஃபேக் அக்கவுண்ட்களை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களுக்கு ஒரு சில நெகட்டிவ் எண்ணம் கொண்டவர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருவதாகவும் ஒரு சில நேரத்தில் எல்லை மீறி அவர்கள் செய்யும் கமெண்ட்டுகளுக்கு நேரடியாக பதிலளித்தால் சிக்கல் ஏற்படும் என்பதற்காக அவரே தனது உதவியாளர்களை வைத்து சில ஃபேக் அக்கவுண்ட்களை தொடங்கி அதன் மூலம் நெகட்டிவ் கமெண்ட் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பல நடிகர் நடிகைகள் நெகட்டிவ் கமெண்ட்களை எதிர்கொள்ள முடியாமல் அமைதியாக இருந்து விடும் நிலையில் நடிகை அமைரா தஸ்தூர் அதிரடியாக ஃபேக் அக்கவுண்ட்களை தொடங்கி பதிலடி கொடுத்து வருவதை அடுத்து அவரது பதிவுகளுக்கு நெகட்டிவாக பதிவு செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. நெகட்டிவ் கமெண்ட்களை தடுக்க இப்படியும் ஒரு வழி இருக்கா? என்று மற்ற நடிகர் நடிகைகள் ஆச்சரியப்பட்டுள்ள நிலையில் அவர்களும் இதனை பின்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement