• Jan 10 2025

கோலிசோடாவுடன் சிறகடிக்க ஆசை முத்து நண்பர்! 20 ஆண்டுகள் பின்னால் கொண்டுபோய் விட்டது!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


இவ்வாறு விஜய் டிவியின் லொள்ளுசபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் பழனியப்பன். இவர் குறித்த சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பின்பு மேலும் பிரபலமாகியுள்ளார். அவ்வாறே சமீபத்தில் அவர் கோலி சோடா குடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் 20 வருடங்களுக்கு முன்பு தியேட்டருக்கு போகும் போது இதை வேறு யாராவது வாங்கினால் வேடிக்கை பார்ப்பதாகவும், இப்போது இதை பார்க்கும் போது எனது பழைய நினைவுகள் திரும்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement