• Aug 07 2025

"ரெட்ட தல" படத்தின் Exclusive அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் மற்றும் ஃபிட்டான ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். அவருடைய பவர் பேக்‌ட் ஆக்ஷன் ரோல்கள்  ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. தற்போது, அவர் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த பெரிய படம் தான் ‘ரெட்ட தல’.


பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதுடன் சாம்.சி.எஸ் இசையமைக்கின்றார். இந்தப் படம் பற்றிய சஸ்பென்ஸ், சமீப நாட்களாகவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை (ஆகஸ்ட் 7) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


'ரெட்ட தல' என்பது ஒரு மாஸ், ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது என படக்குழுவினர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாநாயகியாக சித்தி இத்னானி நடிக்கின்றார். இவர் முன்னதாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அவருடைய அழகும், நடிப்புத் திறனும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement