• Jan 10 2025

வெளிச்சத்துக்கு வந்த பிக் பாஸ் அர்ச்சனாவின் ரகசிய காதல்! விரைவில் திருமணமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக தனது கேரியரை தொடங்கியவர் தான் அர்ச்சனா. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

நூறு நாட்கள் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக இவர் வீட்டிற்குள் நுழைந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிறகு ஆட்டமே சூடு பிடித்தது எனலாம். நீதி, நேர்மை, நியாயம் என சரியான பாதையில் சென்று இறுதியாக பிக் பாஸ் டைட்டிலையும் வெற்றி பெற்றிருந்தார் அர்ச்சனா.


அதற்குப் பிறகு வெளியே வந்த அர்ச்சனாவுக்கு அமோக வரவேற்பு மக்களால் கொடுக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த சம்பளத்தை வைத்து கார், வீடு என வாங்கி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா எந்த ஒரு சீரியலிலும் படங்களிலும் கமிட் ஆகவில்லை. அதற்கு மாறாக நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார்.


இந்த நிலையில், அண்மையில் அவருடைய காதலர் எனக் கூறப்படும் சீரியல் நடிகர் அருணுடன் இணைந்து முதன்முறையாக வெளியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

இதுவரை ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது விழா ஒன்றில் பங்கேற்று உள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்ய போகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.



Advertisement

Advertisement