• Dec 27 2024

என்னை மன்னிச்சிடுங்க Husband,இதை சொல்லியே ஆகனும்- நடிகை அமலாபால் சொன்ன அதிர்ச்சித் தகவல்- இதை எதிர்பார்க்கலையே...

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை அமலாபால். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.


மேலும் இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும்  இவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் விவாகரத்தும் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் என்பவரைக் கரம்பிடித்தார்.


இந்நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அமலாபால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் தற்பொழுது சில புகைப்படங்களைப் பதிவிட்டு தான் மட்டுமல்ல தனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் .

ஒரு பெண் கர்ப்பம் அடையும் பொழுது அந்த கர்ப்பத்தை தனது கணவரும் தாங்குகிறார் என்ற அர்த்தத்தில் அவர் கூறியுள்ளார் என்று பலரும் நினைத்த நிலையில், அவர் கணவருக்கு வந்துள்ள குட்டித் தொப்பையை மேற்கோளிட்டு அவரும் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் கூறியுள்ளது சிரிப்பலைகளை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement