• Jan 10 2025

ரியாக்ஷன் வச்சே இவ்வளோ தூரம் வந்துட்டா! போட்டுத்தாக்கிய சுனிதா! உடைந்து அழும் சவுந்தர்யா!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த முறை பழைய போட்டியாளர்களை ஒட்டுமொத்தமாக உள்ளே இறங்குவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பது போல பிக்பாஸ் கொடுத்த டுவிஸ்ட்டால் டாப் 8 போட்டியாளர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இந்த ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த சுனிதா " இந்த வீட்டுல ரொம்ப வீக்னா அது ஜாக்குலின் தான். சவுந்தர்யா மற்றும் ஜாக்குலின் நேர்மையானவர்கள் இல்லை" என்று சொல்கிறார். மேலும் சவுந்தர்யா உன்னோட ரியாக்ஷன் வச்சே இவ்வளோ தூரம் வந்துட்ட என்றும் சொல்கிறார்கள்.


அத்தோடு தர்ஷா குப்தா "யாருக்கு கூடுதலான கைதட்டுகள் வருகிறதோ அவங்களுடைய பயணம் மாறிக்கிட்டே இருக்கு என்று சொல்கிறார். இப்படி மாறிமாறி இவர்கள் சொன்னதை கேட்டு சவுந்தர்யா மனமுடைந்து அழுகிறார் "இவ்வளோ நாள் இருந்தது எல்லாம் ஒண்ணுமே இல்லாமல் பண்ணுறாங்க" என்று சொல்லி அழுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.   


Advertisement

Advertisement