• Dec 26 2024

டாடா பட இயக்குனருடன் கைகோர்த்த ஜெயம் ரவி.. அதிரடியாக வெளியான அறிவிப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் ஜெயம் ரவி. இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் குடும்பப்பாங்கான  படங்களாகவே காணப்படும் அல்லது திரில்லர் படங்களாக காணப்படும். இதன் காரணமாகவே ஜெயம் ரவிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு கிசுகிசு தகவல்களிலும் சிக்காத ஒரு நடிகராக ஜெயம் ரவி காணப்பட்டார். ஆனால் தற்போது ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயல் வீச ஆரம்பித்துள்ளது.

அதன்படி தனது காதல் மனைவி என ஆட்சிஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கு ஜெயம் ரவி அதிரடியாகவே முடிவெடுத்துள்ளார். ஆனால் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது இது ஜெயம் ரவி தன்னைச்சையாக எடுத்த முடிவு என்று ஆர்த்தி பதிலுக்கு அறிக்கை வெளியிட்டார். 

ஆனாலும் ஜெயம் ரவி அதன் பிறகு கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் கூறுகையில், இரு வீட்டாரின் பெற்றோரும் கதைத்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்று தனக்கு தெரியவில்லை என்று சொல்லியிருந்தார்.


மேலும் ஜெயம் ரவி தனது மாமியார் வீட்டில் இருந்தபோது ஆர்த்தி மற்றும் தனது மாமியாரால் ஏற்பட்ட கொடுமைகளையும், பணம் ரீதியாக அவருக்கு இடம்பெற்ற அநீதிகளையும் பற்றி தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஆர்த்தி குடும்பத்தார் மீது தமது வெறுப்பை காட்டினார்கள். ஆனால் தற்போது ஜெயம் ரவி தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், டாடா பட இயக்குனரான கணேஷ் பாபு உடன் புதிய படத்திற்கு கூட்டணி அமைத்துள்ளார் ஜெயம் ரவி. அதன்படி ஜெயம் ரவியின் 34 ஆவது படத்தை டாடா பட இயக்குனர் இயக்க உள்ளாராம். தற்போது இந்த தகவல்  வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்க உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement