• Dec 27 2024

பல திரையரங்குகளில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் காட்சிகள் ரத்து.. அதிர்ச்சி தகவல்.. என்ன நடந்தது?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள பல ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்த படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு சமீபத்தில் தொடங்கிய நிலையில் முன்பதிவு மற்றும் முதல் நாள் வசூல் மட்டுமே 200 கோடி ரூபாய் வசூல் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் இந்த படம் இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டது. ஆனால் ஐமேக்ஸ் திரையரங்குகளை பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு முன்பே படத்தின் கன்டென்ட் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் இருக்கும் நிலையில் தற்போது இதுவரை படத்தின் கன்டென்ட் டெலிவரி செய்யப்படவில்லை என்றும் கால தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஐமேக்ஸ் திரையரங்கில் அதிரடியாக ’கல்கி 2898 ஏடி’ படத்தின் காட்சிகளை ரத்து செய்து விட்டதாகவும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ரத்து என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மற்ற திரையரங்குகளில் திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement