• Dec 27 2024

விஜய் சேதுபதியை கார்த்திக் குமாருக்கு பிடிக்காதே..! பிக் பாஸ் ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு தற்போது இறுதியாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் பெயர்கள் தான் லிஸ்டில் இறுதியாக காணப்படுகிறது.

இதுவரையில் இடம்பெற்ற 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் வெற்றி கரமாக நடத்தி வந்த நிலையில், தற்போது அவருக்கு அடுத்தடுத்த பட வேலைகள் இருப்பதன் காரணத்தினால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யா, சிம்பு, விஷால், சரத்குமார், அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் நயன்தாராவின் பெயர்கள் அடிபட்டன.

ஆனாலும் அதன் இறுதியில் இதற்கு சரியானவர் விஜய் சேதுபதி தான் என்று கிட்டத்தட்ட உறுதியானது. இதில் பங்குபற்றும் போட்டியாளர்கள் பற்றிய விபரமும் நாளாந்தம் வெளியானவாறு உள்ளது. ஆனாலும் இன்னும் அதிகாரவபூர்வமான உறுதிப்படுத்த தகவல் வெளியாகவில்லை.


இந்த நிலையில், பாடகி சுசித்ரா தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தனது எக்ஸ் தல பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றாரா? அதில் கார்த்திக்குமார் போட்டியாளராக பங்கேற்கப் போவதாகவும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பிய சுசித்ரா, 'ஐ ஹேட் விஜய் சேதுபதி' என கார்த்திக் குமார்  கூறியதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவர் எப்படி இடம் பெறுவார் என்ற கேள்வியை எழுப்பி மீண்டும் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.


Advertisement

Advertisement