• Dec 26 2024

ரொம்ப வித்தியாசமான இடத்தில் தோடு குத்திக் கொண்ட நயன்தாரா! எந்த இடத்தில் தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதில் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலமே விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிக்க தொடங்கினார்கள்.

இவ்வாறு காதலிக்க தொடங்கியவர்களின் காதல் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து திருமணத்தில் முடிந்தது. பிரபல நட்சத்திரங்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக அவர்களுடைய திருமணம் நடைபெற்றது. அதன் பின்பு வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தைகளுக்கு தாயானார்.

தற்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, அதைவிட மேலாக தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனித்து வருகின்றார். அது மட்டும் இன்றி தனது வியாபாரத்தையும் பல இடங்களில் விஸ்தரித்து வருகின்றார்.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு துபாய் நாட்டில் முக்கிய நண்பர்களோடு பிறந்தநாள் கொண்டாட்டங்களை கொண்டாடி உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி காணப்பட்டன.


இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இல்லாமல் நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய காதில் கூடுதலாக இரண்டு தோடுகளை குத்திக் கொண்டுள்ளார். அதற்காக ஒரு அழகு நிலையத்திற்கு சென்று அவர் காது குத்திக் கொண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காது குத்தும் போது அவர் காட்டிய ரியாக்ஷன் பல ரசிகர்களையும் நோகடித்து வைத்துவிட்டது. ஆனாலும் அவர் காது குத்திய பின்பு ரொம்ப வித்தியாசமாக குத்தி இருக்கின்றாரே என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement