நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 25 ஆம் தேதி பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாக உள்ளன, அது மட்டும் இல்லாமல் வெவ்வேறு மொழிகளில் உருவான வெவ்வேறு வகை கதைகள் ரசிகர்களை கவர உள்ளது.
முதலாவதாக, பாலிவுட்டில் கோபி புத்திரன் இயக்கத்தில், வாணி கபூர் மற்றும் வைபவ் ராஜ் குப்தா நடிப்பில் உருவான 'மண்டலா மர்டர்ஸ்' திரைப்படம் வெளியாகிறது. இது குற்றப்பரிசோதனை மற்றும் திரில்லர் கலந்த கதையமைப்புடன் உருவாகியுள்ளது.
அடுத்து, ஆங்கிலத்தில் உருவான 'Until Dawn' திரைப்படம் திகில், அமானுஷ்யம் கலந்த சர்வைவல் கதையாக இருக்கிறது. மைக்கேல் சிமினோ மற்றும் ஓடெச்சா அசியோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து, ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் 'Happy Gilmore 2' படம், ஒரு காமெடி மற்றும் விளையாட்டு கலந்த நெகிழ்ச்சி மிக்க கதையாக வருகிறது. 29 வருடங்களுக்குப் பிறகு தனது விளையாட்டை மீண்டும் தொடங்கும் ஹாப்பி கில்மோரின் வாழ்க்கை இதன் மையம்.
மேலும் இவை தவிர, The Red Envelope (தாய்), A Normal Women (இந்தோனேசியா), Their Marriage (ஜப்பான்) மற்றும் Letter From The Past (டர்கிஷ்) உள்ளிட்ட மொழிபெயர்க்கப்பட்ட படங்களும் ஜூலை 25 அன்று வெளியாகின்றன. இந்த வாரம், திரையரங்குகளுக்குத் தகர்த்து நிற்கும் விதமாக நெட்பிளிக்ஸ் பல தரப்பட்ட படங்களுடன் ரசிகர்களை கவர்ந்திழுக்க வருகிறது.
Listen News!