• Jun 08 2025

முதலமைச்சரை சந்தித்த ஒரு நாள் முதல்வர்! இவருடன் இணைந்த தம்பிராமையா!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அரசியல்வாதிகளையும் அரசியலையும் வெறுத்தாலும் ஒரு சில நடிகர்கள் அரசியல் வசதிகளுடன் நல்லுறவை கொண்டுள்ளனர். இவ்வாறு இருக்கையிலேயே  சமீபத்தில் நடிகர் அர்ஜுன் முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்துள்ளார். 


புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆனவர் அர்ஜுன். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது.


இவ்வாறு உள்ள இவர் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அர்ஜுனின் மகள் மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் திருமண விழாவிற்கான அழைப்பிதழை குடும்பத்துடன் சந்தித்து வழங்கினர். தமிழ்நாட்டு அரசியலை விமர்சித்து திரைப்படங்கள் நடிக்கும் அர்ஜுன் இவ்வாறு செய்துள்ளது விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.

Advertisement

Advertisement