• Aug 14 2025

ரஜினிகாந்த் என் பயணத்தில் மறக்கமுடியாத மனிதர்...!இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி..!

Roshika / 9 hours ago

Advertisement

Listen News!

இந்நிகழ்ச்சியின் முக்கிய பகுதியான ‘கூலி’ திரைப்படம் தற்போது திரையரங்கில் சிறப்பு காட்சி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை குறித்து நெகிழ்ச்சி பொங்கிப் பேசியுள்ளார்.


"'கூலி' எப்போதும் என் பயணத்தில் ஒரு சிறந்த படமாகவே இருக்கும். இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தவர் ரஜினிகாந்த் சார். அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்." எனக் கூறிய லோகேஷ், தன்னுடைய இயக்குநர் வாழ்க்கையில் ரஜினியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருப்பதாக தெரிவித்தார்.


மேலும், தமிழ்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, லோகேஷ் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். "திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த மிகப்பெரும் மனிதருக்கு என் வாழ்த்துகள். அவரது பாராட்டிற்குரிய பயணம் இன்னும் பல வருஷங்கள் தொடர விரும்புகிறேன்." எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement