• Aug 13 2025

கிரிஷால் குடும்பத்தில் வெடிக்கும் பூகம்பம்! கோபத்தில் விஜயா.. சிறகடிக்க ஆசை டுடே எபிசொட்

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா முத்துவப் பார்த்து கிரிஷை schoolல சேர்க்கும் போது அம்மாவோட போட்டோவை கொடுத்திருப்பாங்க அங்க போய் வாங்குவம் என்று சொல்லுறார். இதனை அடுத்து அண்ணாமலை முத்துகிட்ட வந்து கிரிஷோட பாட்டியை பற்றிய தகவல் ஏதும் கிடைச்சதா என்று கேட்கிறார். அதுக்கு முத்து அவங்கள காணேல என்கிறார். அதைக் கேட்ட விஜயா இது சரிவராது இவனை எங்கயாவது ஆச்சிரமத்தில விடுங்க என்று சொல்லுறார்.


இதனை அடுத்து ஸ்ருதி மீனா கிட்ட வந்து கிரிஷோட வாழ்க்கையில நடக்கிறதைப் பார்க்க திரில்லர் படம் மாதிரி இருக்கு என்கிறார். பின் அண்ணாமலை school-ல விசாரிச்சிட்டன் அவங்க கிரிஷோட அம்மா பேரு கல்யாணி என்று சொல்லுறாங்க என்று முத்து கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி ஷாக் ஆகுறார். பின் கிரிஷின்ட பாட்டியோட போட்டோவை school-ல இருந்து வாங்கி எல்லாரும் தேடிப்பாக்குறாங்க.

அதனை அடுத்து ரோகிணி கடைசில நான் தான் மாட்டிக்கப் போறன் போல இருக்கு என்று ஜோசிக்கிறார். பின் கிரிஷ் ரோகிணி கிட்ட போய் நான் உன்கூடவே இருக்கவா என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி இல்ல கிரிஷ் அது முடியாது என்று சொல்லுறார். மறுநாள் காலையில மனோஜ் எல்லாரையும் கூப்பிட்டு இனிமேல் இந்த பையன் இந்த வீட்டில இருக்க கூடாது என்கிறார். 


இதனைத் தொடர்ந்து முத்து கிரிஷை எங்கயும் கொண்டுபோய் விட முடியாது அவன் இங்க தான் இருப்பான் என்று சொல்லுறார். அதுக்கு மனோஜ் நீ மட்டும் முடிவெடுக்கேலா நாங்களும் சொல்லணும் என்கிறார். பின் கிரிஷ் இருக்கணுமா இல்லையா என்று  vote போடுறார்கள். இதனை அடுத்து கிரிஷ் நான் எங்கயும் போக மாட்டேன் இங்க தான் இருப்பன் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement