சமீபத்தில் நடிகர் தனுஷுடன் காதல் தொடர்பில் உள்ளதாக கிசுகிசுவுக்கு ஆளான நடிகை மிருனாள் தாகூர், அது உண்மையல்ல என்றும், தனுஷ் தனது நல்ல நண்பர் மட்டும் என விளக்கம் அளித்திருந்தார். தற்போது, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருனாள், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு மிருனாள் தாகூர் அளித்த ஒரு பேட்டியின் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், நடிகை பிபாஷா பாசுவை குறிவைத்து அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். "பிபாஷா பாசு ஆண் போலக் muscle உடன் இருக்கிறார், நான் அவரை விட அழகாகவும் feminine-ஆகவும் இருக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ள அந்தக் கருத்துகள், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பிபாஷா பாசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதன் மூலம், தன்னை அவமதித்த மிருனாளுக்கு நேரடி பதிலடி கொடுத்துள்ளார். "தனது உடலை நேசிப்பது, பலம் என பெருமை கொள்வது தவறல்ல" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!