பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நடிகை மற்றும் முன்னாள் எம்.பி ரம்யா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாகவும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் குறித்தும், ரம்யா சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
"தேர்தல் ஆணையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு நகைச்சுவையானது. உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் ஏன் உள்ளன என்பதற்கும், அவற்றை நீக்க என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கும் விளக்கம் தர வேண்டும்," என ரம்யா கண்டனம் தெரிவித்தார்.
இந்திய மக்களாட்சியின் தூணாக கருதப்படும் தேர்தல் ஆணையம், அதன் நியாயமான செயல்பாடுகள் குறித்து பல தரப்பில் சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இப்படியான கேள்விகளை எழுப்புவது முக்கியத்துவம் பெறுகிறது.
ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் முறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள குறைபாடுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், நடிகை ரம்யா அவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Listen News!