சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கூலி. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அதனை பூர்த்தி செய்ய தவறியதாக கூலி படம் அமைந்துள்ளது. ஆனாலும் வசூலில் நாளுக்கு நாள் கல்லா கட்டி வருகிறது.
பான் இந்திய அளவில் கூலிப்படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த படம் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் பான் இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் இருந்தார்களே தவிர இந்த படத்தின் கதை பான் இந்திய அளவிற்கானதாக காணப்படவில்லை. இதனால் கூலி படம் பற்றி படுமோசமாக விமர்சனங்கள் எழுந்தன.
கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் மற்றும் அனிருத் கூட்டணி அமைத்ததால் இந்தப் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைக்கப்பட்டு 90 சதவீதமான டிக்கெட்டுக்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை புக் ஆகிவிட்டது. இதனால் இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்து வசூல் வேட்டையில் தொய்வில்லாமல் நகர்கின்றது.
இந்த நிலையில், மூன்றாவது நாளில் கூலி திரைப்படம் இந்திய அளவில் மட்டும் 38.5 கோடிகளை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை படக் குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் முதல் மூன்று நாட்களில் மட்டும் உலக அளவில் 300 கோடிகளுக்கு மேல் கூலி திரைப்படம் வசூலித்திருக்கும் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!