• Apr 25 2025

சிம்பு கேட்டு "No" சொல்ல முடியுமா..? மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சந்தானம்; நடந்தது என்ன?

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் தான் சந்தானம். இவர் தற்பொழுது ஹீரோவாக வளர்ச்சியடைந்து திரைப்பயணத்தில் பல புகழ் மிக்க நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சந்தானம், தனது நெருங்கிய நண்பரான நடிகர் சிம்புவைப் பற்றிய உணர்ச்சி மிகுந்த மற்றும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரது வார்த்தைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

சந்தானம் பேட்டியில் கூறியதாவது, "ஒரு நாள் சிம்பு எனக்கு நேரில் கால் பண்ணினார். ஒரு படம் பண்ணுறேன், அதுல நீயும் கண்டிப்பா நடிக்கனும் என்று கேட்டிருந்தார். சிம்பு கேட்டவுடனே நான் 'Yes' சொல்லனும். அதில் எந்த சந்தேகமும் இல்ல. காரணம், அவர் எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர்." இதை சொல்லும் போது சந்தானத்தின் குரலில் சிம்புவின் மேல் இருந்த மரியாதையும் நன்றி உணர்வும் வெளிப்பட்டது. 


மேலும், "சிம்பு ஒரு கேள்வி கேட்டால், அதற்கு No என்று சொல்ல முடியாது. அவர் சொன்னா அதுவே எனக்கு ஆணை." என்றும் கூறியிருந்தார். சிம்புவின் மீது தன்னுடைய நன்றியை வெளிப்படுத்திய சந்தானம், "நான் இவ்வளவு வளர்ச்சியடைய, சிம்பு எனக்கு தொடக்கத்தில் பெரிய வாய்ப்புகளைக் கொடுத்தவர். எனது வாழ்கையை மாற்றிய அவருக்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன்." என்று உணர்ச்சி பூர்வமாக தெரிவித்திருந்தார்.

சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் திரைத்துறையில் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் நெருக்கமான நட்பைக் கொண்டுள்ளனர். எந்த நேரமும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்த இந்தக் கூட்டணி அதிகளவான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement